Wednesday, July 29, 2009

நினைவுகள்

என்
மரணமும் என்னை
மறுத்துவிடுகிறது
உன்
நினைவுகள் என்றும்
என்னுள் வாழ்வதால்



seo india | seo india

Tuesday, July 28, 2009

நிலா ரசிகனின் கவிதைகள்

நான் எழுதியவை
அனைத்தும் வெறும்
வார்த்தைகள்...
என்றாவது இதை
நீ படிக்க நேர்ந்தால்
ஒரு வேளை கவிதையகலாம்!


யார் யாரோ
நம் நேசத்தை
நிராகரித்த போதெல்லாம்
கலங்கிவிடவில்லை
நீ யாரோ
நான் யாரோ
என்று நீ
சொல்லும் வரையில்...

அன்று
உன் பார்வை அலைகளால்
என்னை அடித்தாய்..
இன்று
ஏன் இதயப்பாதையில்
உன்
நினைவுப்பாசிகள்..


பிரிந்தவளே..
தென்றலுக்கே சிறகுகள்
தந்தவள் நீ..
எனக்கு மட்டும்
ஏன் சிலுவைகள்
தந்துவிட்டாய்?

அழும்போது கூட
கண்ணீர் வராமல்
கஷ்டப்பட்டு அழுகிறேன்
கண்ணீரோடு உன்
நினைவுகளும் கரைந்து விட்டால்
என்ன செய்வேன்?

உயிரானவளே
கவிதையிலேயே
உன்னை இவ்வளவு
நேசிக்கிறனே..
ஒரு வேளை நிஜத்தில்
நீ கிடைத்திருந்தால்
உன்னை எப்படியெல்லாம்
நேசித்திருப்பேன்..
ஏனடி பிரிந்தாய்?
கேள்விகளோடு போய்விடுகிறது
என் வாழ்க்கை

seo company india

Sunday, July 26, 2009

கல்லறைக்கு வந்த ரோஜா பூக்கள்

உயிர் கொடுக்க முடியும்
என்னுடைய வார்த்தைகளுக்கு
நீ
ஒவ்வொரு முறையும் என்னுடைய
கவிதைகளை வாசிக்கும் பொழுது...

சிலருக்கு பனித்துளி பிடிக்கும்
சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்
யாரையாவது உண்மையாக நேசித்து பார்
கண்ணீர் துளி கூட பிடிக்கும்

விடியும் வரை காத்திருந்தேன்...
கனவில் நீ வருவாய் என்று
ஆனால்
மறந்து விட்டேன்
உறங்க உன் நினைவால்...

அவளுக்கு நான் கொடுத்த ரோஜா பூக்கள்
வீணாகவில்லை!
இதோ மொத்தமாக கொண்டு வருகிறாள்
ஏன் கல்லறைக்கு...

seo company in chennai

Wednesday, July 22, 2009

தடம் மாறி போனதேனடி ?

தடம் மாறி போனதேனடி ? உன் மனம்
உன் போன்றவரால் தான்
பெய்யாமல் பொய்த்ததோ வானம்
ந்ம் உறவை காதல் என்று சொல்லி
கொச்சைப்படுத்த விரும்பவில்லை நானும்
உன்னால் பெண்மைக்கன்றோ அவமானம்
நமது உறவு நட்பா ? காதலா ?
நட்பு என்றால் துரோகம் செய்திருக்க மாட்டாய்.
காதல் என்றால் விட்டு பிரிந்திருக்க மாட்டாய்.
உன்னால் என்னை பிரிய முடியும் என்றால்
என்னால் உன்னை மறக்கவும் முடியும்
உன்னால் ஒருவனை கைபிடிக்க முடியும் என்றால்
என்னால் ஒருத்தியை கரம்பிடிக்க முடியாதா ? என்ன
இப் பரந்த உலகில் என்றாவது உன்னை சந்தித்தால்
இதோ பார் எனக்கெனப் பிறந்தவெளென
என் மனைவியை அறிமுகம் செய்வேன்


seo in india

Tuesday, July 7, 2009

கல்லறை

அன்று...அவளுக்காக என்னை கொன்றாய்!
அவளோ உன்னையே கொன்று விட்டாள்!
இன்று உன் கல்லறையின்
அருகில் யார் இருக்கிறார்கள்?
என்னைத் தவிர...

நீ இல்லை என்றால் நான் இல்லை
என்பதல்ல "காதல்!"
யார் இல்லை என்றாலும், உனக்காக
நான் இருப்பேன் என்பதுதான் "காதல்"

துடிக்கும் இதயம்
நின்று போகலாம்,
ஆனால்,
நின்ற இதயம் கூட
துடிக்கும்!
உன் அழகான நினைவுகள்
என் அருகில் இருந்தால்...

seo india

Monday, July 6, 2009

தாஜ்மகால்!

இந்த உலகம் ஒரு கல்லறை ஆகும் வரை
இந்த கல்லறை ஒரு
உலக அதிசயம் தான்
தாஜ்மகால்!

நிலையான அன்புக்கு பிரிவில்லை
சொல்லா சொல்லுக்கு அர்த்தமில்லை
தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை
உண்மையான காதலுக்கு மரணம் என்றுமே இல்லை

நீ விரும்பும் இதயம்
உன்னிடம் நிறைய எதிர் பார்க்கும்!
உன்னை விரும்பும் இதயம்
உன்னை மட்டுமே எதிர் பார்க்கும்!

நீ எத்தனை மொழிகள் பேசினாலும்,...
உன் கண் பேசும் மொழியைத் தவிர
வேறு மொழிகள் எனக்குப் புரிவதில்லை!

என் விழியில் உன் முகம் கூட சுகமே
என்னை உரசிப்போகும் உன் மூச்சுக்காற்றும் சுகமே
உன்னை முத்தமிடத் துடிக்கும் என் உதடுகளும் சுகமே
உன் பெயரை எழுதத் துடிக்கும் என் விரல்களும் சுகமே
உன் நினைவில் துடிக்க மறுக்கும் என் இதயத்தை தவிர.. 

seo india

Saturday, July 4, 2009

வியக்கிறேன்!

கவிதைய பெயரா
வியக்கிறேன் அன்பே!
வேலா விழியா
வியக்கிறேன் அன்பே!
இதழா சுளையா
வியக்கிறேன் அன்பே!
மலரா மேனியா
வியக்கிறேன் அன்பே!
ஆனால் மறந்து விடு என்றாய்
உன் வார்த்தையில் என்னைக் கொன்றாய்
சொல்லா வாளா
இறக்கிறேன் அன்பே!

Friday, July 3, 2009

மரணம்

நொடிக்கு நூறு முறை இறப்பேன்...
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியில் பிறப்பேன்,
மீண்டும்
உன்னுடன் வாழ்வேன் என்றால்...

கண்கள் செய்த சிறிய தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டணை
"காதல்"

"மரணம்" என்றால், பயந்து விடுகிறேன்!
இறந்து விடுவேன் என்பதற்க்காக அல்ல!
உன்னைப்
பிரிந்து விடுவேன் என்பதற்க்காக!...

உன்னைக் காணத் துடிக்கிற கண்களுக்கு
எப்படி புரிய வைப்பேன்?
"நீ" என் இமைகள் என்று!

துடிக்க மட்டும் தெரிந்த என் இதயத்திற்கு
தவிக்கவும் கற்றுக் கொடுத்துவிட்டது
உன் "காதல்"

ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்கவில்லை ,
"தண்ணீர்"
ஒரு அடி என்னை விட்டு நகர்ந்தாய்!...
என் கண்களில் தோன்றியது,
"
கண்ணீர்!"

Thursday, July 2, 2009

பிரிவு

நொடிக்கு
நூறு முறை இறப்பேன்...
என் மரணம்
உன் மடியில் என்றால்!
இறந்த மறு நொடியில் பிறப்பேன்!
மீண்டும்
உன்னுடன் வாழ்வேன் என்றால்!...

நான்
கடவுளிடம் கேட்டு
கொடுக்காத வரம் நிறைய...
ஆனால்
நான் கேட்காமலே கொடுத்த வரம்
"நீ!"

நீ அருகில் இருந்த பொது...
அடிபட்ட காயத்தின் வலி கூட தெரியவில்லை!
நீ அருகில் இல்லாததால்...
இதயத்தின் துடிப்பு கூட வலிக்கிறது!

Wednesday, July 1, 2009

கல்யாண விருந்து

கல்யாண விருந்து தான்...
ஆனாலும் கை நனைக்க முடியவில்லை,
கண்கள் நனைந்தன...
காதலியின் திருமணத்தைக் கண்டு!

பேசாத
வார்த்தையை விட,
பார்க்காத
கண்களை விட,
நினைத்துக் கொண்டிருக்கும்
இதயத்திற்கு வலி அதிகம்!

கண்ணீர்
கூட சுகமானது ...!
உனக்காக அழும்போது,
சிரிப்பு கூட சுமையானது !
உன்னை பிரிந்து வாழும் பொது...!

seo chennai  | seo in chennai