Tuesday, June 30, 2009

மௌனம்

பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்!
ஆனாலும்,
நீ பக்கத்தில் வரும்போது, முந்திக்கொள்கிறது
என் மௌனம்!...

சில நினைவுகள் பல உறவுகளை நினைவு படுத்தும்...
ஆனால்,
எனக்கு "உறவுகளே" உன் நினைவுகள் தான்!

முதன் முறையாக
என்னை நினைத்து
நீ கண்ணீர் விடுகிறாய்!
எழுந்து உன் கண்களைத்
துடைக்க முயல்கின்றேன்,
நான் இறந்து விட்டேன்
என்பதையும் மறந்து!...

seo company chennai

Monday, June 29, 2009

காதலின் வலி!

மறந்திருப்பேன் என்று நினைத்திருப்பாய்!
மறக்கவில்லை உன்னை!.....
மறந்து விடு உன் நினைப்பை!


உன்னை மறக்க வேண்டும்
என நினைக்கும் போதெல்லாம்,
உன்னை நினைத்துக் கொண்டிருப்பதை
மறந்து விடுகிறேன்!


அவளை மறக்கத்தான்
நினைத்தேன்...
இன்று வரை மறந்து கொண்டுதான்
இருக்கிறேன்...
அவளை மறக்க நினைத்ததை!

web design chennai