Monday, November 30, 2009

முத்தம்

பக்கத்து வீட்டு குழந்தையின்
கன்னத்தில் குழி விழுகிறதென
பொறாமை கொண்டாய்.
இன்றிலிருந்து துவங்குகிறேன்.
நாளொன்றுக்கு
ஆயிரம் முத்தங்கள் வீதம்
ஒரு மாதக் காலத்தில்
சரியாய் 10 மிமீ ஆழமுள்ள பள்ளம்
நிச்சயம்.-----------------------------------------------------------------------------------
உன்னைக் காதலிப்பதை முழுநேர வேலையாக செய்து
கொண்டிருந்தபோது
என் மாமா என் வீட்டிற்கு ஒருநாள் வந்தார்.
என்னடா செய்ற? என்று அதட்டியபோது
தைரியமாக
"லவ் பண்றேன்" என்றேன்.
சன்னமான குரலில் கேட்டார்
"எவ்வளவுடா தினக்கூலி?".
உன்னிடம்
சொல்லி வருத்தப்பட்டப் போது ,..
என் கன்னங்களிலும் உதடுகளிலும்மாறிமாறி பலமுறை முத்தமிட்டாய்.
பின் என் கண்களை உற்று நோக்கி சொன்னாய்

"அது நாளுக்குநாள் ஏறிக்கொண்டிருக்கிறது என சொல்"

seo india
-----------------------------------------------------------------------------------
எனக்கு வாழ்க்கை முழுமைக்கும்
ஒரே ஒரு திருமணம் என்பதில்
உடன்பாடில்லை என்றேன்.
எரித்து விடுவது போல் பார்த்தாய்.
ஆயிரம் திருமணம் வேண்டும் ஒரு நிபந்தனையோடு,
அனைத்து முறையும் நீயே மணப்பெண்ணாக
என்றேன்.
அந்நியன் விக்ரம் போல‌ சட்டென மாறி
முத்தமழைப் பொழிந்தாய்.
அப்போதும் எரிந்து கொண்டிருந்தேன்.


-----------------------------------------------------------------------------------
seo company chennai

முத்தப்பொழிவுரை

விட்ட குறை
தொட்ட குறை
இல்லை
இனி இடும்
முத்தங்களில்
காண்பாய்
முகவுரை
மூச்சு
முட்டும் வரை
காண்போம்
பொழிவுரை 



seo company chennai 

முத்த மழை

அம்மா திட்டுகிறாள்
நேற்றைய இரவில்
தலையணையை
நான்
நனைத்தற்காக
சீ ... போடா ...
மோசம் நீ!
தலையணையை
நீ என
நான்
நினைத்து
இதழ் மழை
பொழிந்ததால் ... 



seo company india

Monday, November 16, 2009

படித்ததில் பிடித்தது

நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...

அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்


ஒன்றேயொன்று
கொடுக்கவே
யோசித்தவள்
நீதானா என
திக்குமுக்காடிப்
போனேன் உன்
உதடுகளின்
வேகம் கண்டு...



போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...



ஏற்கனவே அழகாக
இருக்கும்
உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை
வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?



கொடுக்க கொடுக்க
வளரும் செல்வம் கல்வி
மட்டும் அல்ல
உன் முத்தமும் தான்...

- இது நவீன் பிரகாஷின் கவிதைகள்



seo india | seo in india